ஆர்கே நகரில் 1858 ஓட்டு.. சிறுமியிடம் சில்மிஷம்- சிக்கிய ஆர்.கே. நகர் பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சிக்கிய பாஜக வேட்பாளர் பிரேம் ஆனந்த் பின்னணி இது.
Recommended Video

சென்னை: ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெறும் 1858 வாக்குகள் மட்டுமே வாங்கியவர்.
திருவனந்தபுரம்- சென்னை ரயிலில் நள்ளிரவில் சிறுமிக்கு காமுகன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்தான். ஈரோடு ரயில் நிலையத்தில் அந்த காமுகனை பெற்றோர் போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில் பிடிபட்ட காமுகன் பிரேம் ஆனந்த், சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அத்துடன் தென்சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாக இருந்து சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதும் அம்பலமானது.
மேலும் 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக போட்டியிட்டு 1858 ஓட்டுகள் மட்டுமே பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இவர் அவர் அல்ல... பாஜக விளக்கம்
இது தொடர்பாக பாஜகவின் தமிழக ஊடகப் பிரிவு தலைவர் பிரசாத் தம்முடைய ஃபேஸ்புக் பதிவில், சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேம் ஆனந்த், 2006-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர். ஆனால் இவர் தற்போது கட்சியில் இல்லை.

நடிகர் சந்தானம் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரேம் ஆனந்த் இவர் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications