ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: பட்ஜெட் குறித்து ஆலோசனை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் தலைமைச் செயலாளர், 28 அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரும் மே மாதத்துடன் அதிமுக அரசின் ஆட்சி காலம் முடிகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி 11ம் தேதி நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் பற்றி ஜெயலலிதா தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளாராம். இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் மகிழும் வகையில் பல புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டை வரி விதிப்பு இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்ய உள்ளதாம் அதிமுக அரசு. பட்ஜெட் குறித்து இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications