ராஜிவ் நினைவுநாள்... தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழகத்தில் ரத்து!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவுநாளையொட்டி வழக்கமாக நடைபெறும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு இம்முறை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு மே 21-ந் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே21- ந்தேதி தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அன்றைய தினம் நாடு முழுவதும் மாநில தலைமை செயலகங்களில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி கடைபிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை.
இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் பணிக்கு வந்த ஊழியர்கள் தீவிரவாத உறுதிமொழி ஏற்புக்காக ஒன்று கூடியிருந்தனர். ஆனால் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி எதுவும் இல்லாததால் வழக்கம் போல அனைவரும் பணிக்கு திரும்பினர்.












Click it and Unblock the Notifications