கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை ரத்து - ஹைகோர்ட்டில் தமிழக அரசு
கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
கால்நடை உதவியாளர் பதவியில் காலியாக 1,577 பணியிடங்களுக்கு தமிழக அரசு சார்பில் தேர்வு நடத்தப்பட்டது. கால்நடை உதவியாளர் பணியிடங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு நிரப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து திருவாரூரை சேர்ந்த கிருத்திகா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கால்நடை உதவியாளர் பணியிடங்கள் லஞ்சம் பெற்று கொண்டு நிரப்பப்படுகின்றன. எனவே சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரி தலைமையில் குழு நியமனம் செய்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் கால்நடை உதவியாளர் பணி நிரப்பும் போது மாவட்ட அளவிலான ரோஸ்டர் முறையை பின்பற்ற வேண்டும் என்று அருண்குமார் என்பவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்குகளுக்கு பதிலளித்து உயர் நீதிமன்றத்தில் கால்நடை பராமரிப்பு துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் கால்நடை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கால்நடை துறையில் உதவியாளர் பதவிக்கு காலியாக இருந்த 1,577 இடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
மாநில அளவிலான முறைக்கு பதில் மாவட்ட அளவிலான முறையை கடைபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications