ராகு காலத்திற்கு முன் பொறுப்பேற்ற கிரிஜா வைத்தியநாதன்- முதல்வருடன் ஆலோசனை
தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் இன்று நல்ல நேரம் பார்த்து பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் உடனடியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை: தமிழக தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தயநாதன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையிர் அவர் பொறுப்பேற்ற அவருக்கு அதிகாரிகள், தலைமைச் செயலக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து அவர் தலைமைச் செயலாளராக நீடிக்க எதிர்ப்பு கிளம்பியது.

ராமமோகனராவ் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து அவர் 40 நாட்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய தலைமைச்செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நேற்று நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிரிஜா வைத்தியநாதன் தமிழகத்தின் 45 வது மற்றும் 4வது பெண் தலைமைச் செயலாளர் ஆவார். இவர் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பொறுப்புகளை கவனிப்பார். புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வருடன் ஆலோசனை
தலைமை செயலாளராக பொறுப்பேற்ற கிரிஜா வைத்தியநாதன் உடனடியாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறைக்கு சென்று ஆலோசனை நடத்தினார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கிரிஜா வைத்தியநாதன் 9 மணி முதல் 10.30 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து பொறுப்பேற்றுக்கொண்டார். 10.30 மணிக்கு மேல் ராகு காலம் என்பதால் உடனடியாக முதல்வரையும் சந்தித்து ஆலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications