அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து
சென்னை: நோபல் பரிசு வென்ற கைலாஷுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குழந்தைகளின் அடக்குமுறைக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியதற்காக இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கு 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு இருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த நன்னாள் எதிர்காலத் தூண்களாக விளங்கும் குழந்தைகளின் வெற்றித் திருநாள்.

நம் நாட்டின் புகழ் உலகம் முழுவதும் பரவவும், நம் நாடு வல்லரசாக திகழவும், பொருளாதாரம் வளம் பெறவும் அவசியமான கல்வியை எதிர்காலத் தூண்களாக விளங்கும் குழந்தைகள் பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் கட்டணமில்லாக் கல்வியை நடைமுறைப்படுத்தி, மிதி வண்டி, மடிக்கணினி, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள் என அனைத்தையும் விலையில்லாமல் அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி, அறிவுசார் சமுதாயத்தை அமைக்க பாடுபட்டவர் மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள்.
எதிர்காலச் செல்வங்களாகிய குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்களுடைய கல்வி உரிமைக்காகவும் தான் செய்த வேலையை துறந்ததோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்காக தன்னுடைய வாழ்நாளையே அர்ப்பணித்தவர் திரு.கைலாஷ் சத்யார்த்தி. அடிமைத் தொழிலாளர் விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளராக தன்னுடைய பொதுவாழ்க்கையை தொடங்கியவர் கைலாஷ் சத்யார்த்தி.
சத்யாத்ர்த்தியின் பணியை பாராட்டி பல்வேறு நாடுகள் மிக உயரிய விருதுகளை வழங்கி இருக்கின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரமாக அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டு இருப்பது இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ளது. ஏடு தூக்கி பயிலும் குழந்தைகள் தான் நாளை நாடு காக்கும் தலைவர்கள் என்று நினைத்து பாடுபடும் சத்யார்த்தி அவர்களின் பணி தொடர வேண்டும்.
மேன்மேலும் சிறக்க வேண்டும். அதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் என்ற முறையே இந்தியாவில் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். கைலாஷ் சத்யார்த்திக்கு தமிழ்நாடு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications