ஒரே நேரத்தில் ஓ.பி.எஸ், சசிகலா பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநர் திட்டம்?
ஒரே நேரத்தில் முதல்வர் ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது குறித்து ஆளுநர் யோசித்து வருகிறாராம்.
சென்னை: ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தங்களது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் உத்தரவிடலாம் என்ற புதிய பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக சட்டசபை சபாநாயகருடன் ஆளுநர் ஆலோசனை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இருவரும் ஆட்சிக்கு உரிமை கோரி வருவதால் இருவரையும் ஒரே நாளில் அடுத்தடுத்து பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு உத்தரவிடுவது குறித்து ஆளுநர் சிந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வமும் சரி, சசிகலாவும் சரி இருவருமே தங்களுக்கு ஆதரவு இருப்பதாக சொல்கிறார்கள். எனவே இருவரையும் ஒரே சமயத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது குறித்து ஆளுநர் சிந்திக்கிறாராம். நேற்று இருவரும் ஆளுநரைச் சந்தித்து தத்தமது கோரிக்கைகளை வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.
இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடனும் ஆளுநர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய அரசிடமும் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பையும் ஆளுநர் கவனத்தில் கொண்டுள்ளார். அதற்கு முரணாக ஆளுநரால் செயல்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபையில் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் கட்சியே ஆட்சியில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பின் முக்கிய சாராம்சமாகும். எனவே சட்டசபையில்இரு தரப்பையும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடலாம் என்றே எதிர்பார்க்ப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications