அதிமுகவைப் பற்றி எங்களைவிட ஸ்டாலினுக்கு ரொம்பவும் கவலை... கலாய்க்கும் ராஜேந்திர பாலாஜி
அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை எங்களை விட மு.க.ஸ்டாலின் அதிக அளவில் அக்கறை காட்டுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை எங்களை விட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிக அளவில் அக்கறை காட்டுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் நாளை தங்குதடையின்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தேவைக்கு அதிகமான அளவில் ஆவின் பால் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், ஒரு சில அமைப்பினர் நாளை வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.
நாளை காலை 6 மணி முதல் பால் விநியோகம் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டே திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சில அமைப்புகளைத்தூண்டி விட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தங்களை விட ஸ்டாலினே மிகவும் கவலைப்படுவதாகவும், அதிமுக ஒரு மிகப்பெரிய கட்சி என்பதால் அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications