தமிழக ஆசிரியர்களுக்காக வருகிறது “இ-சர்வீஸ் ரெஜிஸ்டர்” திட்டம்
சென்னை: தமிழக கல்வித்துறை விரைவில் ஆசிரியர்களின் முக்கிய கோப்புகளுக்கான "இ-சர்வீஸ் ரெஜிஸ்டர்" என்ற புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆசிரியர்கள் ஒய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை பெற பயன்படும் முக்கிய கோப்புகளில் ஒன்று தான் "பணி பதிவேடு". இப்பதிவேடுகள் தான் ஆசிரியர் பெயர், படித்த படிப்பு, பணியில் சேர்ந்த நாள், படிப்படியாக ஊதிய உயர்வு பெற்ற விபரங்கள், பணிக் காலத்தில் ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கான முக்கிய ஆவணங்களாகும்.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் மழை, வெள்ளம், தீ போன்ற இயற்கை இடற்பாடுகளால் பாதிக்கப்பட்டால் அவர்கள் பதிவேட்டை திரும்ப பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு பணிக்காலத்திற்கு பின்னான ஓய்வூதியம் போன்ற சலுகைகளுக்காக அலையும் சூழ்நிலை ஏற்படலாம். எனவே, இவ்விடர்பாடுகளை களைவதற்காக பதிவேடுகளை ஆன்லைன் மயமாக்குவதற்கான "இ-சர்வீ்ஸ் ரெஜிஸ்டர்" என்ற திட்டத்தை கல்வித்துறை அமல்படுத்த உள்ளது.
இதன் மூலம் சம்பள கமிஷனில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடம் மாற்றம், ஓய்வு கால பலன்கள் போன்றவற்றை எளிதாக மேற்கொள்ள முடியும். மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள விபரங்கள் சேமிக்கபடுவதைப் போன்று "ஆசிரியர் புரொபைல்" என்ற பெயரிலான ஆசிரியர்களுக்கான விபரங்கள் அடங்கிய கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
முதல்கட்டமாக தொடக்க கல்வித்துறையில் ஒன்றியம் வாரியாக இந்த பணிகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு இதில் இ-சர்வீஸ் ரிகார்டுகளுக்கான பதிவேற்றமும் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக கல்விதுறை அதிகாரிகள் கூறுகையில்,
மாவட்டம் தோறும் பள்ளிகள் தொடர்பான தகவல்கள் சேகரிப்பு தொகுப்பில் "இ-சர்வீஸ்" என்ற பிரிவில் ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. அதில் ஆசிரியர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த நாள், இனம், மொழி, பதவி உயர்வு, பெறுகின்ற சம்பளம், வீட்டு முகவரி, ரத்த வகை, போட்டோ, இமெயில் முகவரி போன்றவை இடம் பெற்றிருக்கும். அவர்கள் எங்கிருந்து வேண்டுமானலும் தங்கள் பதிவேடுகளை பார்த்து கொள்ளலாம் என்றனர்.












Click it and Unblock the Notifications