சட்டசபைத் தேர்தல்... அதிமுகவுக்கு 'ஃபெப்சி' பகிரங்க ஆதரவு!
சென்னை: தமிழ் சினிமாவின் மிகப் பெரிய அமைப்பான தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் - ஃபெப்சி- அதிமுகவுக்கு தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.
திரைத்துறையிலும் அரசியல் உலகிலும் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 16-5-2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவை 10-5-2016 அன்று (நேற்று) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும் அகில இந்திய திரைப் படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.சந்திரன், துணைத் தலைவர்கள் கே.சம்பத், ஏ.சபரி கிரிசன், வி.ராமன், டி.கே.மூர்த்தி, கே.ஜி.ஜீவானந்தம், எஸ்.சுந்தர், இணைச் செயலாளர்கள் ஆர்.தனபால், ஆர்.எஸ்.ராஜா, என்.ராதா, பி.ரமணபாபு ஆகியோர் நேரில் சந்தித்து, அ.தி.மு.க.வுக்கு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், தங்களுடைய அமைப்புகளின் ஆதரவை தெரிவித்தனர்.
அதற்கு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் உள்ள 24 சங்கங்களின் கூட்டமைப்புதான் ஃபெப்சி. இந்த அமைப்பின் ஆதரவின்றி சினிமாவே இயங்காது என்ற நிலை உள்ளது. பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு அதிமுகவுக்கு ஆதரவளித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications