போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்ததை- 11 பேர் குழுவை அமைத்தது தமிழக அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த 11 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 22 அம்ச கோரிக்கைகளை வற்புறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் பஸ் ஸ்டிரைக் போராட்டத்தை நடத்தினர்.

4 நாட்கள் நீடித்த இந்த பஸ் ஸ்டிரைக் கடந்த 31-ந்தேதி போக்குவரத்து அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.

TN gov forms committee for talks with transport unions

இப் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்து இருந்தார். அதன்படி போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை தமிழக அரசு இன்று நியமித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகரராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை அரசு கவனத்துடன் பரிசீலனை செய்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில் கலந்து கொள்வதற்கு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றினை அமைத்து அரசு இதன்மூலம் ஆணையிடப்படுகிறது.

இந்த குழுவில், நிதித்துறை கூடுதல் செயலாளர் உமாநாத், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் நிர்வாக இயக்குனர், அரசு விரைவு போக்குவரத்து கழகம், மற்றும் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிறுவன இணை நிர்வாக இயக்குனர், சென்னை போக்குவரத்து துறை அலு வலக முதுநிலை துணை மேலாளர் (நிர்வாகம்) ஆகிய 11 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+