பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழ் மொழி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்களுக்கு அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார் விருது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.
சென்னை: தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டு உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்காக விருதுகளைப் பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளுவர் விருதுக்கு புலவர் பா. வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை பெரியார் விருதுக்கு பண்ருட்டி ராமச்சந்திரனும், அம்பேத்கர் விருது, மருத்துவர் இரா. துரைசாமிக்கு வழங்கப்பட உள்ளன.

மேலும், அண்ணா விருதுக்கு கவிஞர் கூரம் மு.துரை, காமராஜர் விருதுக்கு டி. நீலகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதியார் விருதுக்கு முனைவர் ச. கணபதிராமன், பாரதிதாசன் விருதுக்கு கவிஞர் கோ. பாரதி, திரு.வி.க. விருதுக்கு போராசிரியர் மறைமலை இலக்குவனாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருதினைப் பெற மீனாட்சி முருகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருதுகளை வரும் 15ம் தேதி, காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வழங்குகிறார்.
விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். மேலும், இந்த விழாவில் 50 வயதையடைந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் அளிக்கப் படஉள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications