டாஸ்மாக் தடைக்கு எதிராக மேல்முறையீடு... அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது ஐகோர்ட்!
மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்று சென்னை உய்ரநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தள்ளது.
சென்னை : நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை மாற்று இடத்தில் திறக்கக் கூடாது என்று கோடை விடுமுறை கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட கடைகளை மாற்று இடத்தில் அமைக்கக் கூடாது என்று சென்னை கோடை விடுமறை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் கடந்த சனிக்கிழமை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதில் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மாற்று இடத்தில் திறக்கக் கூடாது, அமைதியான முறையில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் இடங்களில் டாஸ்மாக் திறக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து நீதிபதிகளின் உத்தரவு நகல் நேற்றே அரசிடம் கிடைத்தாகவும், ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட 2 ஆயிரம் கடைகளை மாற்று இடங்களில்திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கோடைகால அவசர வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம், எஸ்எம்.சுப்ரமணியம் முன்பு அவசர வழக்காக ஏற்கப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications