ஜெ. அரசுக்கு எதிராக கொதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்: மறியல் செய்த ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல், காலி பணி இடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த 10ம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு துறை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சுமார் 60 ஆயிரம் பேர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக இருந்ததால் அரசு ஊழியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சி கூட்டங்களை நடத்தினார்கள்.
இந்த நிலையில் அரசு ஊழியர் சங்க போராட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்தது. இன்று (திங்கட்கிழமை) முதல் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தை சேர்ந்த மோசஸ் அறிவித்து இருந்தார். அரசு ஊழியர்களின் போராட்டம் இன்று மேலும் தீவிரமாகிறது.

முடங்கிய பணிகள்
இன்று காலை முதல் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வணிக வரித்துறை, வேலை வாய்ப்பு துறை, தொழிற் பயிற்சி துறை போன்றவற்றில் ஊழியர்கள் வேலைக்கு வராததால் துறைரீதியான பணிகளும், மக்கள் பணிகளும் முடங்கின. அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை முதல் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் கைது
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அரசு ஊழியர்கள் திரண்டனர். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். விருந்தினர் மாளிகையை முற்றுகையிட சென்ற அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.
மாநிலம் முழுவதும் கைது
அரசு ஊழியர்களின் தொடர் சேலை நிறுத்த போராட்டத்தால் பல்வேறு துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
முதல்வர் அறிவிப்பாரா?
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் நீதித்துறை, ரேஷன் கடை ஊழியர்களும் இன்று பங்கேற்கிறார்கள். எங்களின் முக்கிய 4 கோரிக்கைகளை முதல்வர் அறிவித்து விட்டால் முக்கிய பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வி கூறியுள்ளார்.
போராட்டம் தீவிரமாகும்
இனி பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. பட்ஜெட் கூட்டத் தொடரிலோ அல்லது முதல்வரின் பிறந்தநாள் அறிவிப்பாகவோ நல்ல செய்தி வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி இல்லை என்பது போன்ற நழுவலான அறிவிப்பு வரும் பட்சத்தில் எங்களது போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று தமிழ் செல்வி கூறியுள்ளார். பட்ஜெட்டில் முதல்வர் அறிவிப்பாரா?
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications