For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குதிரை ஏறி மேலே பறக்கும் தமிழகம்...!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் தொடங்கியுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த விளம்பரங்கள் தான் இன்றைய தினசரிகளின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துள்ளது.

தமிழக அரசின் முக்கிய சாதனைகளுள் ஒன்றாகக் கருதப்படும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியுள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

TN government gives Global investors meet advertisement in all news papers

இந்த மாநாடு தொடர்பான தமிழக அரசின் விளம்பரம் இன்று தமிழகத்தில் வெளியாகும் தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளில் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

அந்த விளம்பரத்தில் மாநாட்டின் லோகோவான பறக்கும் குதிரையும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தைக் குறிக்கும் வகையில் ஆங்கில எழுத்துக்களான டி.என் என்ற எழுத்துக்களின் மீது இந்தக் குதிரை இடம்பெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, இந்த விளம்பரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் இடம் பெறவில்லை. அதற்குப் பதில் ஜெயலலிதாவின் பெயர் பெரிய எழுத்துக்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மறக்காமல் புரட்சித் தலைவி என்ற பட்டமும் இடம் பெற்றுள்ளது.

English summary
The Tamilnadu government today gave full page advertisement for global investors meet in all news papers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X