மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம்.. தடையில்லா சான்று வழங்கியது தமிழக அரசு
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சென்னை: மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடை இல்லா சான்று வழங்கியுள்ளது தமிழக அரசு.
மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு ரூ1,816 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடயே 2011- ம் ஆண்டு பணிகள் நிறுத்தப்பட்டன. 19 கிமீ தூரமுடைய இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 30 சதவீத பணிகள் முடிந்த நிலையில் திட்டம் கிடப்பில் போடப்பட்டது

இந்த திட்டம் கூவம் ஆற்றின் போக்கை கெடுப்பதாக கூறி, ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை அத்திட்டத்திற்கு அனுமதி மறுத்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க உடன்பட்டார். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக திட்டம் தொடங்கவில்லை.
இதையடுத்து பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை, மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து விரைவாக செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தமிழக அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மதுரவாயல்-துறைமுகம் இடையே 1530 கோடியில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. 6 ஆண்டாக கிடப்பில் இருந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications