For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைகோர்ட் அரசு பிளீடர் சுப்ரமணியமும் திடீர் ராஜினாமா.... பொறுப்பு வழக்கறிஞர்களை நியமித்தது அரசு!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பிளீடராக செயல்பட்டு வந்த எம்.கே.சுப்ரமணியமும் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சென்னை : அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினத்தை தொடர்ந்து அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியமும் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

 TN government pleader also resigned his job

சொந்த காரணங்களுக்காகஅரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகுவதாக வழக்கறிஞர் ராஜரத்தினம் இன்று காலை

அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ல் நியமிக்கப்பட்ட ராஜரத்தினம், அரசு சார்பில் பல்வேறு வழக்குகளில் வாதாடியவர். ஓராண்டுக்குப் பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில் அரசு ப்ளீடராக உள்ள எம்.கே.சுப்ரமணியமும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து அரசின் (பொறுப்பு) பிளீடராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று தலைமை குற்றவியல் வழக்கறிஞராக(பொறுப்பு) எமிலியாஸை நியமனம் செய்வதாக அரசு அறிவித்துள்ளது.

English summary
Followed by Public prosecuter Rajarathinam resigned, government pleader M.K.Subramaniyam also resigned today, government appoints incharges to replace them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X