5.5 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்- இலவசங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி!
சென்னை: நடப்பாண்டில் தமிழகத்தில் ரூ1,100 கோடியில் 5.5 லட்சம் பிளஸ் டூ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டில் இலவசங்களுக்கு மட்டும் மொத்தம் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் கூறியதாவது:

மோனோ ரயில் திட்டம்
சென்னையில் மோனோ ரெயில் திட்டம் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014-2015-ம் ஆண்டு இத்திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நதிநீர் இணைப்பு
உலக வங்கியின் நிதியுதவியோடு 745.49 கோடி ரூபாய் செலவில் ‘அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. 104 அணைகளை நான்கு கட்டிடங்களில் புனரமைப்பதை இத்திட்டம் குறிக்கோளாக கொண்டுள்ளது.
இதற்காக உலக வங்கியோடு திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கென ரூ.329.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு துணை வடிநிலப் பகுதிகளில் 19.82 கோடி ரூபாய் செலவில் 1,335 செயற்கை நீர்ச்செறிவூட்டல் குழாய்களை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2014-2015 ஆண்டில் நபார்டு நிதியுதவித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாசனப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்றே, பாரம்பரிய நீர்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள 2014-2015 ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.86.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் 2013 ஆண்டு டிசம்பர் திங்கள் வரை ரூ.1,823.72 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2014-2015 ஆண்டு இதற்காக ரூ.489.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைப்பதற்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. 2014-2015 ஆண்டில் மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திட ரூ.119.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-2015-ம் ஆண்டு நீர்ப்பாசனத் துறைக்காக ரூ.3,669.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5.5 லட்சம் இலவச லேப்டாப்புகள்
மேலும் பிளஸ் டூ மற்றும் பல்தொழில்நுட்பக் கல்வி பயிலும் 5.5 லட்சம் மாணவர்களுக்கு ரூ1,100 கோடி மதிப்பீட்டில் இலவச லேப்டாப்கள் வழங்கப்படும்.
இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
இன்றைய பட்ஜெட்டில் இலவச திட்டங்களுக்கு மட்டும் ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications