கலாம் பிறந்தநாளில் தமிழக அரசு சார்பில் நடக்கும் இளைஞர் எழுச்சி நாள் போட்டிகள்
திருநெல்வேலி: பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் போட்டிகள் நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் சார்பில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்(அக்டோபர் 15) இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி மண்டலம் முழுக்க உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் இளைஞர் எழுச்சிநாள் கட்டுரை, பேச்சுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தவும் நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்களை ஒருங்கிணைத்து இளைஞர் எழுச்சிநாள் பேரணிகளை நடத்தவும் திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.

இளைஞர் எழுச்சி நாள் போட்டிகள் ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரியிலும் அக்டோபர் 12ம் தேதி காலை 11 மணிக்கு முதல் சுற்றுப்போட்டிகளாக பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
பேச்சுப்போட்டியின் தலைப்புகள்
1. அறிவியல் முன்னேற்றத்தில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ( Bhart Ratna Dr.A.P.J.Abdul Kalam Towards Scientific Development )
2. அறிவியல் சிந்தனை உருவாக்கத்தில் இளைஞர்களின் பங்கு ( Role Of Youth Building Scientific Temper)
3. ஏவுகணை நாயகன் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் (Bhart Ratna Dr.A.P.J.Abdul Kalam - Missile Architect)
4. இந்தியாவை வல்லரசாக்குவதில் அறிவியல் ( Science For Making India - A Super Power)
5. புதியன படைத்தலின் கனவு (Envision and Innovate)
6. அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்கள் (Contribution to Science by Indians)
கட்டுரைப்போட்டியின் தலைப்புகள்
7. இந்திய விண்வெளிப் பயணம் (Indian Space Journey )
8. அன்றாட வாழ்வில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு (Use Science and Technology in Daily Life)
9. மனித நலனில் அறிவியல் (Science For Human Welfare)
10. மாணவர்களை ஊக்குவித்தலில் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பங்கு (Role Of Bhart Ratna Dr.A.P.J.Abdul Kalam in Motivating
Students Scientific Temper )
11. அறிவியலும் சுற்றுச்சூழலும் (Science and Environment )
12. மேம்பட்ட உடல்நலத்திற்கு அறிவியல் (Science for Better health)
இரண்டாம் சுற்றுப்போட்டிகள்
ஒவ்வொரு கல்லூரியிலும் வெற்றி பெற்று முதலிடம் பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவில் பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 13.10.2015 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட அளவில் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் போட்டிகளில் அந்தந்தக் கல்லூரி முதல்வர்களின் கடிதம் மற்றும் அடையாள அட்டையோடு பங்கேற்கலாம்.
போட்டிகளை நடத்துவதற்கு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ் துறைத்தலைவர் முனைவர் சௌ.மகாதேவன் அவர்களை திருநெல்வேலி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகம் போட்டி ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது.
எனவே கல்லூரி அளவில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியர் தங்கள் வருகையை முனைவர் சௌ.மகாதேவன் செல்பேசி எண்:9952140275 அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.
மாவட்ட அளவிலான போட்டிகளை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் தொடங்கி வைக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications