For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்.. ஸ்டாலினுக்கு சென்னை கோர்ட் நோட்டீஸ்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்கில், பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 4 தேதிகளில் ஆஜராக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் அவதூறு கருத்துக்கள்
தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

TN Govt defamation case: dmk leader mk stalin should appear court on February 24 th

இதேபோல குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாகவும் விமர்சித்தது என ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

3 வருஷமாச்சு... இன்று விழுந்துரும்.. நாளை கவுந்துரும்.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்.. தில்லுதான்! 3 வருஷமாச்சு... இன்று விழுந்துரும்.. நாளை கவுந்துரும்.. டரியல் ஆக்கிய எடப்பாடியார்.. தில்லுதான்!

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, முதல்வரை விமர்சித்தது, குடியுரிமை சட்டம் தொடர்பாக அரசை விமர்சித்தது ஆகிய இரு வழக்குகளில் மார்ச் 4 ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24 ம் தேதியும் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டார்.

English summary
TN Govt 3 defamation cases: dmk leader mk stalin should appear chennai distirct court on february 24 th and march 24
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X