சம்பா சாகுபடிக்கு தடையில்லா விதை, உரங்கள்... தமிழக அரசு உத்தரவு!
சென்னை: விவசாயிகளுக்கு விதைகள், உரங்களை தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வேளாண்மைத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறையின் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பேசுகையில், "காவிரிப் பாசனப் பகுதிகளில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடியை முழு வீச்சில் மேற்கொள்ளத் தேவைப்படும் விதை, உரங்கள், நுண்ணூட்ட உரங்களை தேவையான அளவு இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தடையின்றி விநியோகம் செய்ய வேண்டும்.
மண்வள அட்டை இயக்கம், டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பங்கேற்கும் திட்டங்களான தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலைப் பணிகளை விரைந்து முடிப்பதுடன், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் வாழை சாகுபடியாளர்கள் பங்கேற்றுப் பயன் அடையலாம்.
வேளாண் திட்டத்துக்கான இடுபொருள்களை உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு திட்டப் பயன்கள் விரைந்து சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications