மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை சேர்ந்தவரா? உங்க பிள்ளைகளுக்கு தட்டம்மை தடுப்பு ஊசி போட்டாச்சா?
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும் தட்டம்மை தடுப்பூசி முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறும்படி மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதிற்குட்பட்ட நபர்கள் வரை இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாகம்கள் கடந்த 11-ம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதனைத்தொடர்ந்து நேற்று முதல் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் கடலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாம்கள் மூலம் சுமார் 7.65 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம்கள் மூலம் நேற்று வரை 1,41,470 நபர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி முகாம்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையும் வரை தொடர்ந்து செயல்படும். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள இம்முகாம்களுக்குச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு தட்டம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications