எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெ. பிறந்தநாளில் 1500 கைதிகள் விடுதலை - சு.சாமி கண்டனம்
சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video

சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 1500 சிறைக்கைதிகள் நாளை விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை விடுவிக்கும் முடிவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மத்திய சிறை, 9 மாவட்ட சிறை, 88 கிளை சிறை, 8 பெண்கள் சிறைகள் உள்பட 138 சிறைகள் உள்ளன. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.

நன்னடத்தை விடுதலை
சிறைகளில் உள்ள கைதிகள் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள், காந்தி பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிறந்த நாளில் நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது.

விடுதலை செய்ய கோரிக்கை
இதனால், தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி திண்டுக்கல்லில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக சிறையில் ஆயுள்தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த சிறைக் கைதிகளை சட்டத்துக்கு உட்பட்டு மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதல்வர் அறிவித்தார்.

5 ஆண்டுகளுக்கு மேல் சிறை
இது குறித்த அரசாணையை தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில் முன்கூட்டியே விடுதலை செய்ய தேர்வு செய்யப்படும் நபர்கள் 2018 பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்திருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்தால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது சிறையில் இருந்திருக்க வேண்டும்.

கைதிகள் செயல்பாடுகள்
விசாரணை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். கைதியின் செயல்பாடுகள் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அவர்களின் வழக்குகள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 435-ன் கீழ் வராதவையாக இருக்க வேண்டும்.

விடுதலை செய்ய முடியாது
இதுபோன்ற நிலையில் உள்ளவர்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கலாம். இதன்படி பாலியல் பலாத்காரம், மோசடி, வழிப்பறி, கொள்ளை, தீவிரவாத குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்கள், சாதி, மத, இன, மொழி தொடர்பான விரோத உணர்ச்சிகளை தூண்டிவிட முயற்சித்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, கள்ள நோட்டு வழக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், வன்கொடுமை, வரதட்சணை மரணத்துக்கு காரணமானவர்கள், பொருளாதார குற்றங்கள், கள்ளக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்டோர் முன்கூட்டியே விடுதலை செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

தண்டனை பெற்றவர்கள்
இதேபோல ஊழல் தடுப்புச் சட்டம், பாலியல் தொழில் தடுப் புச் சட்டம், போதை பொருட்கள் கடத்தல் தடுப்புச் சட்டம், உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மத்திய சட்டங்களின் கீழ் கைதாகி சிறையில் இருப்பவர்களும் விடுவிக்கப்பட மாட்டார்கள். மற்ற மாநிலங்களில் தண்டனை பெற்று, தமிழக சிறைகளில் இருப்பவர்களுக்கும், இங்கு தண்டனை பெற்று பிற மாநில சிறைகளில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.

ஆயுள் தண்டனை கைதிகள்
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 25.2.2018ஐ தகுதி நாளாகக் கொண்டு ஒருமுறை வாய்ப்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதற்குப் பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது. இதை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு ஆயுள் தண்டனை கைதிகள், தங்களை வெளியே அனுப்புமாறு உரிமை கோர முடியாது. வழிகாட்டுதல்கள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்கள் குறித்த பட்டியலை தயாரித்து சிறைத்துறை ஏடிஜிபி அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விடுதலையாகும் கைதிகள்
இதையடுத்து தகுதியுள்ள கைதிகள் குறித்த விவரங்கள் அனைத்து சிறைகளிலும் சேகரிக்கப்பட்டது. நாளை ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் 1500 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2008ஆம் திமுக ஆட்சியின்போது 1405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

ட்விட்டரில் கண்டனம்
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை விடுவிக்கும் முடிவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நாளை 1500 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications