தமிழகத்தின் அமைதி, வளம், வளர்ச்சிக்காக 5 இயக்கங்களும் 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களும்...
சென்னை: அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோள்களை அடையவும், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடையவும், மாநில அளவில் 5 இயக்கங்களையும், வளர்ச்சிக்கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களையும் தமிழக அரசு வடிவமைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக் கோள்களை அடையவும், தொலைநோக்கு திட்டம் 2023 ஆவணத்தில் வகுக்கப்பட்ட இலக்குகளை அடையவும், மாநில அளவில் 5 இயக்கங் களையும், வளர்ச்சிக் கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்களையும் இந்த அரசு வடிவமைத்துள்ளது.
இந்த 5 இயக்கங்களும் பல்வேறு துறைகள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து உயர் லட்சிய இலக்குகளை அடையும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன.
மாநில அளவிலான இந்த 5 இயக்கங்கள்:-
- நீர் ஆதார மேலாண்மை மற்றும் குடி மராமத்து முறைக்கு புத்துயிரூட்டும் இயக்கம்.
- குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்கிட வீட்டு வசதிக்கான மாநில இயக்கம்.
- வறுமை ஒழிப்பின் மூலம் ஏழைகளுக்குப் பொருளாதார உயர்வை வழங்குவதற்கான இயக்கம்.
- தூய்மைத் தமிழகத்திற்கான இயக்கம்
- திறன் மேம்பாட்டிற்கான இயக்கம்.
- வளர்ச்சிக்கான 11 சிறப்பு நோக்கு பெரும் திட்டங்கள்:
- வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த முதன்மைத் துறைகளின் வளர்ச்சி.
- நகர்ப்புற உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
- சுற்றுலாத்துறை மேம்பாடு.
- குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல்.
- சாலைகள், மின்சாரம், சிறு துறைமுகங்கள், பாசனம், குடிநீர் போன்ற உட் கட் டமைப்பை மேம்படுத்த சிறப்புக் கவனம்.
- தொழில் வழித்தடம் மூலமாக முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் தொடங்க உகந்த சூழலை மேம்படுத்துதல்.
- அனைவருக்கும் கல்வி, குறிப்பாக கல்வித் தரத்திற்கான சிறப்புக் கவனம்.
- அனைவருக்கும் சுகாதாரம்.
- சமூகப் பாதுகாப்பு, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மீது சிறப்பு கவனம்.
- நகர்ப்புறப் போக்குவரத்தினை வலுப்படுத்துதல்.
- நல்லாட்சி மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துதல்.
- மேற்காணும் நோக்கங்களையும், இலக்குகளையும் எட்டுவதற்கான அனைத்து கொள்கைகளையும் திட்டங்களையும் வடிவமைத்து செயல்படுத்த உரிய அணுகு முறைகளை 2016-2017 ஆம் ஆண்டிற்கான இந்த திருத்த வரவு-செலவுத் திட்டம் எடுத்துரைத்துள்ளது.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப் பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications