போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ 5500 கோடி ஒதுக்கீடு தேவை: வைகோ
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.50 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட 01.09.2013 நாளிலிருந்து நிர்வாகத்தால் ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பயன்கள், விடுப்பு தொகை போன்றவற்றின் நிலுவைத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை.
முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், எந்தவித பணப் பயனும் கிடைக்கப் பெறாமலேயே இறந்து போனார்கள் என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

தவணை முறையில் ஓய்வூதியம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த மாதம் மார்ச்சில் இதுவரையில் ஓய்வூதியருக்கு ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்கு உரியது. போக்குவரத்துத்துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதாக உயர்நிலை அலுவலர்கள் காரணம் கூறுகின்றனர்.

ரூ.2400 கோடி இழப்பு
டீசல் விலை உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்துத்துறை ஒரு நாளைக்கு ரூ.6.58 கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவல சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
இதனை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவு இனங்களுக்கு இடையிலான இழப்புத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஓய்வூதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அக்கோரிக்கைகளை கவனத்தில்கொள்ளவில்லை.

நியாமான கோரிக்கை
உரிய நிதி ஆதாரம் இன்றி தத்தளிக்கின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நியாயமானது ஆகும். நடப்பு 2017-18 நிதிநிலை அறிக்கையில், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடிக்கு தீர்வு
ஆனால், போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணப் பலன்கள் உள்ளிட்ட 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த சுமார் 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் போக்குவரத்துத்துறையில் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.

போராட்டம் அறிவிப்பு
ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை இந்த மாதம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றன.

3 நாட்களாக அறப்போராட்டம்
தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் போக்வரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான நிதி ரூ.5500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications