For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து பொறையார்- உயிரை பறிக்கும் அரசு கட்டிடங்கள் சீரமைக்கப்படுமா?

உயிரை பறிக்கும் அரசு கட்டிடங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்கிற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கோவை சோமனூர், நீலாம்பூரைத் தொடர்ந்து நாகை பொறையாரில் அரசு கட்டிட மேற்கூரை இடிந்து உயிர் பலி எடுத்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் அரசு பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சோமனூரில் விசாரணை

சோமனூரில் விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சுகன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் சோமனூரில் விசாரணை நடத்தினார்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

மேற்கூரை இடிந்து விழுந்தது

இந்த விசாரணையின் போது கோவை நீலாம்பூர் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோரே அப்பள்ளிக்கு இழுத்துப் பூட்டி சீல் வைத்தனர்.

பொறையாரில் 8 பேர் பலி

பொறையாரில் 8 பேர் பலி

இதேபோல் கோவை மாவட்டத்தில் 44 அரசு பள்ளிகளின் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில்தான் நாகை பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மேற்கூரை இடிந்து விழுந்து 8 பேர் பலியாகி உள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

எமனாகும் அரசு கட்டிடங்கள்

எமனாகும் அரசு கட்டிடங்கள்

அரசு கட்டிடங்கள் உயிரை பறிக்கு எமனாக விஸ்வரூபமெடுத்திருக்கின்றன. ஆகையால் போர்க்கால அடிப்படையில் அரசு கட்டிடங்களை சீரமைக்க வேண்டியது தமிழக அரசின் முதன்மை கடமை.

English summary
Social Activists urged that the TamilNadu Govt should renovation its own Buildings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X