அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வை-பை வசதி: சட்டசபையில் செங்கோட்டையன் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வை-பை வசதி செய்யப்படும் என சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று மீண்டும் கூடியது. இன்று கேள்வி நேரத்தின் போது வேடசந்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம், 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வை-பை வசதி செய்து தரப்படுமா என கேள்வி எழுப்பினார்.

TN Higher Secondary Schools will get Wi-Fi

இதற்கு பதிலளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என பதிலளித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது மாணவர்கள் பயனடையும் வகையில் வை-பை வசதியும் செய்துதரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu School Education Minister K.A. Sengottaiyan today announced that Higher Secondaray Schools will get Wi-Fi.
Please Wait while comments are loading...