முழு அடைப்பு: தமிழக மற்றும் கர்நாடக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தம்
பெங்களூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு நடைபெறும் நிலையில் தமிழக மற்றும் கர்நாடக பேருந்துகள் எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இன்னும் 10 தினங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100-ஐ தொடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்விற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பந்த் போராட்டம் நடத்தப்படுகிறது. அதுபோல் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் ஆகியன சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
முழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் எல்லையில் நிறுத்தப்பட்டது.
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications