சென்னை உயர்நீதிமன்றம் முற்றுகை .. பெண் வழக்கறிஞர் உள்பட ஏராளமானோர் கைது !
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண் வழக்கறிஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் போராட்டம் நடத்தியதால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வழக்கறிஞர்கள் மீது உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அமலுக்கும் வந்துள்ளது.

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதை வாபஸ் பெற வலியுறுத்தியும், கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் பிரதான வாயிலை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்புக் கட்டையை தள்ளிக்கொண்டு வழக்கறிஞர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசார், வக்கீல்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் போராட்டம் நடத்தியதாக போலீசார் கூறினர். இதையடுத்து இரவில் உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்ற வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான பெண் வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே புதிய சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டு குழு அறிவித்துள்ளது. மேலும் நாளை முதல் நீதிமன்றங்களுக்கு செல்ல மாட்டோம் என போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருமலை தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications