சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு பூஜையா செய்கிறார்?... தினகரனை நறுக்குன்னு கேட்ட சி.வி.சண்முகம்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு பூஜையா செய்யப்போகிறார் வெளியிட வேண்டியது தானே என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுள்ளார்.
கடலூர் : மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு பூஜையா செய்யப் போகிறார் வெளியிட வேண்டியது தானே என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 5ல் சடலமாக வீடு திரும்பினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் கண்ணீர் அலைகள் வீசின.
ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்று அவர் மருத்தவமனையில் சிகிச்சை பெற்ற போது ஒரே கோரசாக கூறிய அதிமுகவினர், இன்று அப்படியே பல்டியடித்து எதிர்ப்பு நிலையை எடுத்துள்ளனர்.
அதிமுகவினர் இன்று சொல்லும் குற்றச்சாட்டுகளை அன்றே கேட்டிருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பாரோ என்றும் கோப அலைகளை தெறிக்க விட்டனர் நெட்டிசன்கள்.

உண்மையை சொன்ன அமைச்சர்
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் உண்மையில்லை. கட்சியின் ரகசியம் வெளியே போய்விடக் கூடாது என்று தான் அப்படிச் சொன்னோம் என்று கூறினார்.

டிடிவி குற்றச்சாட்டு
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்தை கண்டித்த டிடிவி. தினகரன், பதவிக்காக ஆசைப்பட்டு அவர் இப்படி பேசுவதாகக் கூறினார். வயதில் மூத்த அவருக்கு கிடைத்துள்ள அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவே அவர் இப்படி கூறுகிறார் என்றும் தினகரன் விமர்சித்தார்.

சிசிடிவி காட்சியை வெளியிடுவோம்
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் இருப்பதாக தினகரன் தெரிவித்தார். சசிகலாவை சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்திய பின்னர் அந்தக் காட்சிகள் வெளியிடப்படும் என்றார்.

பூஜையா செய்கிறார்?
தினகரனின் இந்த பேட்டிக்கு கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்மகம் பதிலடி அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்திருந்தால் வெளியிட வேண்டியது தானே, அவற்றை வைத்துக் கொண்டு பூஜை செய்கிறாரா என்றும் சண்முகம் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications