பொதுச்செயலர் பதவி: சசிக்கு தேர்தல் ஆணையம் விதித்த கெடு இன்றுடன் முடிவு! அமைச்சர்கள் பெங்களூரு பயணம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிப்பது தொடர்பாக சசிகலாவுடன் ஆலோசனை நடத்த தமிழக அமைச்சர்கள் இன்று பெங்களூரு பயணம் மேற்கொள்கின்ற

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் தொடர்பாக விளக்கம் கோரி தேர்தல் ஆணையம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைவதால் அப்பதவியில் அவர் நீடிப்பதில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.

ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து அந்த மாத இறுதியில் கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி சசிகலாவை கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.

கட்சியை கைப்பற்றியது அல்லாமல் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்பதால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்யவைத்தார் சசி.

 தேர்தல் ஆணையத்திடம் புகார்

தேர்தல் ஆணையத்திடம் புகார்

இதுதொடர்பான உண்மைகளை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் சமாதியின் முன்பு பன்னீர் செல்வம் போட்டு உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பன்னீ்ர் செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்த
அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன.

 தற்காலிக பொதுச் செயலாளர்

தற்காலிக பொதுச் செயலாளர்

இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டாது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மைத்ரேயன் எம்.பி. தலைமையில் பன்னீர் அணியினர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீமை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதிமுக சட்ட விதிகளின்படி தொண்டர்களும் வாக்களித்தால் மட்டுமே பொதுச்செயலரை தேர்வு செய்ய முடியும் என்பது ஓபிஎஸ் அணி வாதம்.

 நோட்டீஸ்

நோட்டீஸ்

ஓபிஎஸ் அணியின் இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சசிகலா பதிலளிக்க தேர்தல் ஆணையம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆகையால் இதுகுறித்து ஆலோசனை நடத்த செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை இன்று சந்திக்கின்றனர். அப்போது தேர்தல் ஆணைத்தின் நோட்டீஸுக்கு பதிலளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

 சசிகலாவுக்கு சிக்கல்

சசிகலாவுக்கு சிக்கல்

தேர்தல் ஆணையத்தின் கெடு இன்றுடன் முடிவடைவதால் அதிமுக பொதுச் செயலாளராக நீடிப்பதில் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சசிகலா பதிலளிக்க்கவில்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையமே மேற்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+