மகாகவி பாரதியாரின் 133 வது பிறந்தநாள்: அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் மரியாதை
சென்னை: மகாகவி பாரதியாரின் 133-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அமைச்சர்கள் வளர்மதி, ரமணன், கோகுல இந்திரா, சின்னையா, சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மகாகவிக்கு மரியாதை செலுத்தினர்.

திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தில், அவரது திரு உருவச் சிலைக்கு, பாரதிய ஜனதா தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பார்த்தசாரதி கோவில் வளாகம் அருகே நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், பாரதியாரின் சிலையை, அப்பகுதி மக்கள், பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
பாரதியாரின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதி நினைவு அறக்கட்டளை சார்பில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிச்சிறுவர்கள் பாரதியார் வேடமணிந்து பங்கேற்றனர்.
பாரதி மணிமண்டபத்தில் தொடங்கி பாரதிக்கு "பாரதி" என்று பட்டம் வழங்கப்பட்ட எட்டையாபுர அரண்மனை, பாரதியார் பிறந்த இல்லம் என எட்டையாபுரம் முழுவதும் மகாகவியின் எழுச்சி மிகு பாடல்களைப் பாடியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
மேலும் பாரதியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மகாகவியின் சித்தாந்தங்களை கடைபிடிக்கவும் தரணியெங்கும் பறைசாற்றவும் தேசபக்தியோடு செயல்படவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவில்பட்டி ஆர்.டி.ஓ உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் பின் தொடர்ந்து உச்சரித்து உறுதியேற்றனர்.
சிறுசிறு பாரதியார்களின் அணிவகுப்பில் எட்டையாபுரம் கோலாகலமாகத் திகழ்ந்தது. தொடர்ந்து எட்டையாபுரத்தில் பாரதியின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications