ரயில் விபத்து: சம்பவ இடத்துக்கு நேரில் செல்லாத தமிழக அமைச்சர்கள்!
சென்னை: ஓசூர் அருகே ரயில் விபத்து நடந்த இடத்துக்கு தமிழக அமைச்சர்கள் எவரும் இதுவரை செல்லாதது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே கர்நாடகா எல்லையான ஆனைக்கல் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளம் சென்ற இன்டர்சிட்டி ரயில் இன்று காலை 7.33 மணிக்கு விபத்துக்குள்ளானது.
இதில் 8 பேர் பலியாகினர். 87 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்து நிகழ்ந்த உடன் கர்நாடாகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார்.

சதானந்த கவுடாவும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். இந்த ரயிலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளாமானோர் பயணித்தனர். அதுவும் விபத்துக்குள்ளான பெட்டிகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 176 பேர் பயணித்துள்ளனர்.
இவர்களில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்த இடத்துக்கு பிற்பகல் வரை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அமைச்சர் கூட சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறவும் இல்லை.. மீட்புப் பணிகளை பார்வையிடவும் இல்லை. இதனால் பயணிகள் கொந்தளிப்பான நிலையில் உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications