காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் கொலைகள்... பீதியில் மக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சமீபத்தில் காஞ்சிபுரத்தை கலக்கிவந்த ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பின் அரசியல் ஆதாய கொலைகள் குறையும் என்று மக்கள் பெருமூச்சுவிட்டிருந்தனர்.
ரியல் எஸ்டேட் கொலைகள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் ரவுடிகள், அரசியல்வாதிகளினால் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

திருப்போரூரில் ரவுடி கொலை
கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி காசிமேட்டை சேர்ந்த ரவிந்தரன் என்ற ரவுடி திருப்போரூரில் வெட்டி கொலை செய்யப்பட்டான்.

முன்விரோத கொலைகள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து மறைமலைநகரை சேர்ந்த அஸ்வின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி சாலையில் முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டான்.

திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு
சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சோந்தவர் ரவி. திமுகவைச் சேர்ந்த இவர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியின் தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
3பேர் கொண்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ரவி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்தது. இதில் ரவியின் அண்ணன் குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து சென்று விசாரணை நடத்தினர். திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அரசியல் கொலைகள்
டிசம்பர் 5 ஆம் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் போரூர் அதிமுக பொருளாளர் ஆக இருந்த தமிழ்ச்செல்வன் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே இருக்கும் அலுவலகத்தை மூடிவிட்டு திரும்பிய போது 5 பேர் கொண்ட மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் மீண்டும் கொலைகள் அரங்கேறும் மாவட்டமாக மாறி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அரசியல்வாதிகளும் கடும் அச்சத்தில் உள்ளார்கள்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications