பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் அதிரடி மாற்றம்- ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பு

Subscribe to Oneindia Tamil

TN PWD minister K V Ramalingam shifted
சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவரது துறை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அளித்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் மாளிகை மாற்றத்தை அறிவித்துள்ளது.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து வந்தவர் கே.வி.ராமலிங்கம். இவர் அமைச்சராக இருந்த இத்தனை காலமும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் புலம்பாத நாள் இல்லை.. காரணம், அமைச்சரின் பொறுப்பான செயல்பாடுகள் அப்படி.

தினசரி அலுவலகத்திற்கு வந்து ஊழியர்களின் வருகைப்பதிவேட்டை பார்ப்பது, லேட்டாக வந்தால் மெமோ தருவது உள்பட அவரது செயல்பாடுகளால் ஊழியர்கள் பெரும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

அவர் மட்டும் வந்தால் போதாது என்று அவரது மனைவியும் கூட அவ்வப்போது சேப்பாக்கத்தி்ல் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களுக்கு விசிட் அடித்து டென்ஷனைக் கொடுப்பாராம்.

இந்த நிலையில்தான் இன்று மாலையில் கே.வி.ராமலிங்கம் திடீரென அவரது பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு விட்டார். அவர் வகித்து வந்த துறை தற்போது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இளைஞர் நலத்துறை அமைச்சரானார் கே.வி.ராமலிங்கம், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகிப்பார்.

வீரமணிக்கு பள்ளிக்கல்வித்துறை இதுவரை இப்பதவியை வகித்து வந்த கே.சி.வீரமணி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இனி பதவி வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+