தமிழகம் வரும் சோனியா, ராகுலுக்கு கருப்புக் கொடி- தமிழக மாணவர் கூட்டமைப்பு
சென்னை: தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தமிழக மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக சோனியா, ராகுல் ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளனர். சென்னையில் நாளை மறுநாள் தீவுத் திடலில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் சோனியாவும் கருணாநிதியும் ஒரே மேடையில் பேச உள்ளனர்.

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் இரு தலைவர்களும் ஒரே மேடையில் பேச இருக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் தமிழக மாணவர் கூட்டமைப்பினர் இன்று மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காரணமாக இருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. அந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா தமிழகத்துக்கு பிரசாரம் செய்ய வருகிறார். அவரது வருகையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
இதேபோல் தமிழகம் வருகை தரும் ராகுல் காந்திக்கு எதிராகவும் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications