ஜிஎஸ்டி + கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு - திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடல்

ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை முதல் தியேட்டர்களை மூடப்போவதாக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முதல் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படும் என தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

100 ரூபாய்க்கு குறைவான சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு அதிகம் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது போக தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 30 சதவிகிதம் கேளிக்கை வரி வசூலிக்க உள்ளது.

TN theatres will be closed indefinitely from Monday

இது மிகப்பெரிய சுமை என்பது திரைப்பட துறையினரின் கருத்து. இந்த கட்டண உயர்வு மக்களின் மீது மிகப்பெரிய சுமை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போல கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. இது தொடர்பாக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கேளிக்கை வரியுடன் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டுமா என்பது குறித்து அரசிடம் இருந்து தெளிவான விளக்கம் இல்லை என்றார்.

எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று வரிவிலக்கு அளிக்கவில்லை எனில் திரையரங்குகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். 58% முதல் 62% வரியை தாங்க முடியாது; இதனால் சினிமா டிக்கெட் விலை கடுமையாக உயரும் என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று வரிவிலக்கு அளிக்கவில்லையெனில் திரையரங்குகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்றும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.

ஜூலை 1 மற்றும் 2ஆம் தேதியன்று மறுநாள் சினிமா கட்டணத்தில் எந்த வித மாற்றமும் இல்லை என்று கூறிய அபிராமி ராமநாதன், திங்கட்கிழமை முதல் ஜிஎஸ்டி வரி மற்றும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூடப்போவதாக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+