தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: சென்னையில் மாலையில் மழை
சென்னை:ஆந்திராவில் நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்தம் தாழ்வுநிலையாக மாறியிருப்பதால் தமிழக்கத்தின் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் ஆந்திரா நோக்கி நகர்ந்து தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

குறைந்த காற்றழுத்தம் தெலுங்கானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இதனால் வடக்கு மற்றும் தென் தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இன்று மழை பெய்யும்.
சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளையில் நகரின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்யும்.
நேற்று காலை 8.30 மணிப்படி திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் அதிகபட்சமாக 7 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் சோழவரம், குடியாத்தம் ஆகிய இடங்களில் தலா 6 செ. மீட்டர் மழையும், கீரனூர், தாமரைப்பாக்கத்தில் தலா 5 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications