மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுப்போம்: பட்ஜெட் உரையில் முதல்வர் ஓ.பி.எஸ். உறுதி
சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதைத் தடுப்போம் என்று தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை நிலைநாட்டிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு, சட்டத்திற்கு புறம்பாக அணை கட்ட எடுக்கும் முயற்சிகளைத் தடுக்க ஒரு இடைக்கால மனுவை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். போற்றுதலுக்குரிய புரட்சித் தலைவி அம்மா வலியுறுத்தியவாறு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க உரிய நடவடிக்கைகளை இந்த அரசு தொடர்ந்து எடுக்கும்.
முக்கிய நதிநீர் இணைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைப்பதற்கான பணிகள் 369 கோடி ரூபாய் செலவில், நான்கு கட்டங்களாக நடந்து வருகின்றன.
காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 254.45 கோடி ரூபாய் செலவில் கட்டளையில் கதவணை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. வரும் நிதியாண்டிற்கு நதிநீர் இணைப்புப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள 253.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications