சத்தியமூர்த்தி பவனில் ராகுல் பிறந்த நாள்.. குஷ்பு பங்கேற்பு... ஏழைகளுக்கு வேட்டி
சென்னை: காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று 'கேக்' வெட்டி கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
ராகுல்காந்தியின் 45வது பிறந்தநாள் விழா இன்று நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. சத்தியமூர்த்தி பவன் இன்று காலையிலேயே விழாக்கோலம் பூண்டது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காலையிலேயே சத்தியமூர்த்தி பவனுக்கு வந்திருந்து விழா ஏற்பாடுகளை கவனித்தார்.

கேக் வெட்டுங்க
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், மகளிர் அணியினர் புடைசூழ ராகுல் காந்தியின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது.

மருத்துவ முகாம்
காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர், குஷ்பு ஆகியோர் பார்வையிட்டனர்.

இலவச வேஷ்டி - சேலை
பிறந்தநாள் விழாவில் ஏழை எளிய மக்களுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் நடிகை குஷ்பு இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார்.

பச்சையில் கலக்கிய குஷ்பு
ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த நடிகை குஷ்பு பச்சை கலர் புடவையில் பாந்தமாக வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

காங்கிரஸ் தலைவர்கள்
விழாவில் குமரிஅனந்தன், திருநாவுக்கரசர், யசோதா, செல்வபெருந்தகை, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், நிர்வாகிகள் சி.டி.மெய்யப்பன், சிரஞ்சீவி, சுமதி அன்பரசு, ஜே.எம்.ஆரூண், ஹசீனா சயீத், மயிலை அசோக், டி.எல்.சலீம் அகமது, முருகானந்தம், பாபா, துறைமுகம் ரவிராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

டாக்டர் கிருஷ்ணசாமி
இந்த கொண்டாட்டத்திற்கு இடையே புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திடீரென சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்கு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications