ப.சி, கா.சியை விடுங்கப்பா.. புது மெம்பர்ஸைப் புடிங்க.. கட்சியினரை முடுக்கி விட்ட இளங்கோவன்!
சென்னை: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சர்ச்சையிலிருந்து விடுபட்டு கட்சிப் பணியில் தீவிரமாகியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கையை அவர் இன்று தொடங்கி வைத்தார்.
ஜெயந்தி நடராஜன் விலகலைத் தொடர்ந்து அவரை விமர்சிப்பதாக கருதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் குறித்து சாடை மாடையாக இளங்கோவன் சொல்லப் போக பெரும் அக்கப் போர் ஆகி விட்டது. இதையடுத்து டெல்லி சென்ற இளங்கோவன் அங்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளரான முகுல் வாஸ்னிக்கை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் சென்னை திரும்பி விட்ட இளங்கோவன் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
புதிய உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினர்களை சேர்க்கும் பணியைத் தொடங்கி வைத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உறுப்பினர் சேர்க்கும் படிவங்களை அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் வழங்கினார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், புதுக் கட்சி ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருவது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications