'லிஸ்ட்'டுடன் டெல்லிக்குக் கிளம்பினார் ஞானதேசிகன்... யார் யாருக்கு சீட்?
சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்ப மனு கொடுத்துள்ளவர்களின் பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் டெல்லி புறப்பட்டுப் போனார்.
அங்கு கட்சியின் 5 பேர் கொண்ட உயர் மட்ட வேட்பாளர் தேர்வுக் குழுவுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையின்போது காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்த தேர்வு நடைபெறும்.

40 தொகுதிகளுக்கும்
40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் யாருடன் அணி சேரப் போகிறது அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பதே தெளிவாக இல்லாத நிலையிலும் கூட பலரும் முட்டி மோதி சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 930 பேர் விருப்ப மனுக்களைக் கொடுத்துள்ளனர்.

25 பேர் கொண்ட குழு ஆய்வு
இந்த மனுக்களை சமீபத்தில் 25 பேர் கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் குழு கூடி ஆராய்ந்தது.

அடுத்து டெல்லியில்
இதையடுத்து தற்போது காட்சிகள் டெல்லிக்கு ஷிப்ட் ஆகியுள்ளன. இந்த விருப்ப மனுக்களுடன் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் டெல்லி புறப்பட்டுப் போயுள்ளார். அங்கு கட்சித் தலைமையிடம் மனுக்களை சமர்ப்பிக்கிறார். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பரிந்துரைப் பட்டியலையும் அளிக்கிறார். அதைத் தொடர்ந்து 5 பேர் கொண்ட மேலிடக் குழு இந்த மனுக்களை ஆராயும். அதன் பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அப்படியே...
முன்னதாக விருப்பமனுக்களை பில்டர் செய்து கட்சி மேலிடத்திடம் கொடுக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்திருந்ததாம். ஆனால் என்ன மனுக்கள் வந்ததோ அதை அப்படியே தர வேண்டும். இந்த பில்டர் காபி வேலையெல்லாம் கூடாது என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதனால் எடிட் செய்யாம்ல அத்தனை மனுக்களையும் கொண்டு போயுள்ளாராம் ஞானதேசிகன்.

வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைக்குமா
இதனால் பல கோஷ்டித் தலைவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். காரணம், கோஷ்டி வாரியாக மனுக்களைப் பிரித்து கட்டுப் போட்டு வைத்திருந்தனர். ஆனால் அப்படிக் கூடாது என்று ராகுல் காந்தி கூறி விட்டதால் தங்களது வாரிசுகள், ஆதரவாளர்களுக்கு சீட் கிடைக்குமா என்ற குழப்பத்தில் கோஷ்டித் தலைவர்கள் உள்ளனராம்.

பழையவர்களுக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு
இந்தத் தேர்தலில் முற்றிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க ராகுல் காந்தி விரும்புவதாக தெரிகிறது. மேலும் கடந்த தேர்தலில் கோஷ்டிப் பூசல் காரணமாக சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தவர்களின் பட்டியலையும் அவர் சேகரித்து வைத்துள்ளாராம். எ்ல்லாவற்றையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு இருக்குமாம்.

பலமுறை பதவி சுகம் வகி்த்தவர்களுக்குக் கல்தா
அதேபோல பலமுறை எம்.பி. பதவி வகித்தவர்களுக்கும் இந்த முறை சீட் கொடுக்கப்பட மாட்டாதாம். முற்றிலும் புதுமுகங்கள், இளைஞர்கள், குற்றம் குறை காண முடியாதவர்கள் என வித்தியாசமான முறையில் இந்த முறை வேட்பாளர்கள் இருப்பார்கள் என்று காங்கிரஸாரே நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications