இன்று முதல் குரூப்-1 தேர்வு விண்ணப்ப விநியோகம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் குரூப் 1 பணிக்கான தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது.
74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் உயர் பதவிகளுக்கான குரூப் 1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகிறது. துணை கலெக்டர் பணியிடங்கள்-19, போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்கள் -26, உதவி வணிக வரி அலுவலர்கள் பணியிடங்கள் -21, மாவட்ட பதிவாளர்கள் பணியிடங்கள்- 8 ஆகிய 74 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
இன்று அறிவிப்பு வெளியானதும். தேர்வு எழுத விரும்பும் பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது 3 அல்லது 4 ஆம் ஆண்டு பட்டப்படிப்புக்கான இறுதி தேர்வு எழுதிவிட்டு சான்றிதழுக்காக காத்திருப்போரும் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி கடைசிநாள்.
இந்த தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 நிலைகளை கொண்டவை. ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் மறுதேர்வுக்கு செல்லமுடியும். துணைகலெக்டர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில வருடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக முடியும். அதுபோல துணை சூப்பிரண்டு பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அவர்கள் சில ஆண்டுகள் கழித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி. ஆக முடியும்.
முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்வு தமிழ்நாடு முழுவதும் 33 மையங்களில் நடக்க உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications