விரைவில் குரூப்-4 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீத கிருஷ்ணன்
சென்னை: குரூப்-4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என டின்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பொறுப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பணிகளுக்கு எழுத்து தேர்வை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது.
இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்களும், கலை அறிவியல் படிப்பு படித்த பட்டதாரிகளுமே அதிகம் பேர் இருந்தனர்.
இந்த நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர்,
"12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்து முடித்துவிட்டோம்.அவற்றை சரிபார்த்து தேர்வு முடிவை வெளியிட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன.
தற்போது இட ஒதுக்கீட்டின்படி ஆட்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறோம். விரைவில் முடிவை வெளியிட ஏற்பாடு செய்துவருகிறோம். அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்"என்று தெரிவித்தார்.
மேலும்,கடந்த டிசம்பரில் நடைபெற்ற குரூப்-2 முடிவுகளும் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்து காத்துள்ளனர் தேர்வு எழுதிய பட்டதாரிகள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications