போலீஸ் சித்ரவதை தாங்க முடியாமல் காவல் நிலையத்தில் அரசுப் பேருந்து டிரைவர் தீக்குளிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே போலீசார் தன்னை சித்ரவதை செய்வதை தாங்க முடியவில்லை என்று கூறி அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர் காவல் நிலையத்தில் தீக்குளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்து உள்ள மென்னந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். அரசுப் பேருந்து டிரைவர். அவர் பணி முடிந்து வீட்டிற்கு சென்றிருந்திருக்கிறார். அவரது வீட்டிற்கு வந்த போலீசார் வழக்கு விசாரணைக்காக கோபால் மற்றும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் அவர்களை அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த கோபால் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து அவர் காவல் நிலையத்திலேயே தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார்.
தீக்குளித்ததில் காயம் அடைந்த கோபாலை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications