சமஸ்கிருதத்தை தமிழர்கள் கற்க வேண்டும்.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை
தமிழர்கள் பிறமொழிகளை கற்றுக்கொண்டால் தான் முன்னேற முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்
சென்னை: தமிழர்கள் தமிழ் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொண்டால் வாழ்வில் முன்னேற உதவியாக இருக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.

இதில் அகராதியின் முதல் பிரதியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் வெளியிட, சமஸ்கிருத பாரதி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் தினேஷ் காமத் அதனைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம், அவ்வாறு கற்றுக் கொள்வது வாழ்வில் முன்னேற உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் சமஸ்கிருதம் மொழியில் பல பொக்கிஷங்கள் அடங்கியுள்ளதாகவும், அதனை தமிழர்கள் பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் எச். ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டரனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications