குமரி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதியில் டாஸ்மாக்.. கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோழிபோர்விளையில் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், கோழிபோர்விளையில் வா்த்தக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு வருபவர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்வதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து பல முறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, இன்று தமிழக வாள் வீச்சு வீரா் டேவிட் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் நாகர்கோயிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அலுவலக வாயிலை மறித்த அவர்கள், தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications