ரயிலில் கட்டுக்கட்டாக பார்சலில் வந்த புகையிலை... வழக்கை தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்...
நெல்லை: ரயில் நிலையத்துககு வந்த ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டுகட்டாக புகையிலை சிக்கியதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு தாவியில் இருந்து மும்பைக்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சரக்கு பெட்டியில் டெல்லியில் இருந்து கோவைக்கு 29 மூட்டை புகையிலை அனுப்பப்பட்டது. கோவையில் இந்த மூட்டைகளை யாரும் பெற்று கொள்ளாததால் இந்த மூட்டைகள் இரவில் நெல்லை வந்து இறங்கியது.

சரக்கு பெட்டியில் சந்தேகத்து இடமாக இருந்த இந்த மூட்டைகளை நெல்லை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை ரயில்வே காவல் நிலையம் கொண்டு சென்று மூட்டைகளை ஆய்வு செய்தனர்.
29 மூட்டைகளிலும் புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூட்டையிலும் 2 ஆயிரம் பாக்கெட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கோவையில் உள்ள ஒரு நபருக்கு புகையிலை மூட்டை அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த மூட்டையை இதுவரை யாரும் காவல் நிலையம் வந்து வாங்கி செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் சிககியிருப்பதால் புகையிலை பண்டல்களை பெற்று கொள்ள முடியாது என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து இரு துறையை சேர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். வட மாநிலங்களில் புகையிலை விவசாய பொருளாக இருப்பதால் அதை நிகோடின் உள்ளிட்ட போதை பொருட்கள் பட்டியலில் இருந்தால் மட்டுமே பறிமுதல் செய்ய முடியும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து புகையிலையை சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. புகையிலையில் கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தால் அவற்றை அழிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tobacco Bundels seized in Jammu thavi Mumbai train bounded nellai. It Worth Rs. 10 lacks
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications