”உருக்காத வெண்ணை தந்தேன்,ஒருக்காலும் கணவனை பிரியாத வரம் தா”
சென்னை: இன்று காரடையான் நோன்பு பெண்களால் கொண்டாடப் படுகிறது.
தங்களின் மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும்.
மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

கணவன் உயிரை மீட்ட பதிவிரதை:
சத்தியவான் - சாவித்திரி கதை தெரியாதவர்களே இருக்க முடியாது.எமனிடம் இருந்து தன் கணவன் உயிரை மீட்டு வந்த அப்பதிவிரதையின் நினைவாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.இக்கதையை கேட்பவர்கள் தீர்க்க ஆயுளுடன் இருப்பார்கள்.

கலச பூஜை:
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும்.

கணவனின் நீண்ட ஆயுள்:
"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்" என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார் கள். "மாசிக்கயிறு பாசி படியும்" என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

காரமணி கலந்த கார அடை:
இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லைக் குத்தி கிடைக்கும் அரிசி மாவில், இனிப்பு, காராமணி சேர்த்து அடை தயாரிக்க வேண்டும்.

மாங்கல்ய பலம்:
இதுவே, காரடை ஆகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும் "காரடையான் நோன்பு" என்று பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.

தீர்க்க சுமங்கலியாக்கும் விரதம்:
இக்காரடையான் விரத நோன்பு இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications