சரியும் தக்காளி... உயரும் உருளை... உச்சத்தில் சின்ன வெங்காயம்!
சென்னை: காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்து, காய்கறி விலை சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டானது ஆசிய அளவில் பெரிய சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து வகை காய்கறிகளும் வினியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் விளையும் காய்கறிகள் அனைத்தும், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன.
தமிழகத்தின் பிற பகுதிகளில் கிடைப்பதற்கு அரிதான காய்கறிகள் கூட கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.

காய்கறி வரத்து அதிகரிப்பு
தற்போது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறி விலை ‘மள மள'வென சரிவடைந்துள்ளது.

விலை சரிவு
இதனால் தக்காளி, கேரட், பீன்ஸ், நூல்கோல், சவு-சவு, இஞ்சி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. அதேசமயம் உருளைக்கிழங்கு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

தக்காளி வரத்து அதிகம்
கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இப்போது சட்டென்று விலை குறையக் காரணம் வரத்து அதிகரித்துள்ளதே என்கின்றனர் வியாபாரிகள்.

உருளை விலை உயர்வு
அதே சமயம் ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ 42 ரூபாய்க்கும் கர்நாடகா உருளைக்கிழங்கு ரூ.35க்கும், ஆக்ரா உருளை கிலோ 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சாம்பார் வெங்காயம்
சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயிலேயே நிற்கிறது. பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ 20 ரூபாய்
கத்தரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 10 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரை - 25 ரூபாய்க்கும் முருங்கைக்காய் - 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் - 20 ரூபாய்க்கும், புடலங்காய் - 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் விலை
மேலும், கோயம்பேடு சந்தையில் தேங்காய் 4 ரகமாக பிரிக்கப்பட்டு, ஒரு தேங்காயின் விலை, முதல் ரகம் 24 ரூபாய்க்கும், 2-ம் ரகம் 20 ரூபாய்க்கும், 3-ம் ரகம் 15 முதல் 17 ரூபாய்க்கும், 4-ம் ரகம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை மேலும் குறையும்
பருவமழை பெய்துள்ளதால் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே விலை மேலும் சரியவாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சரிவடையத்தொடங்கியுள்ளதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications